Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சியாட்டில்: கைக்குழந்தைகளை வைத்திருப்போர், குறிப்பாக ஒற்றைத் தாய்மார்கள் அந்தக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு எங்கும் போக முடியாமல், விசேஷங்களுக்குப் போக முடியாமல் தவிப்பதை சாதாரணமாக காணலாம். இப்போது அவர்களுக்கு ஒரு சூப்பர் சந்தோஷ செய்தி வந்துள்ளது.

கீழே இறக்கி விட முடியாமல் இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டே பல வேலைளையும் செய்யும் பெண்மணிகளை நம்ம ஊரில் நிறையவே பார்க்கலாம். அவர்களுக்கெல்லாம் இந்த புதிய பாணி 'பேபிகீப்பர் பேசிக்' என்ற புதிய 'தொங்கட்டான்' பெரும் வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நூதன டிரஸ்ஸை டோஞ்சா கிங் மற்றும் எலிசா ஜான்சன் ஆகிய இரு அமெரிக்க சகோதரிகள் இணைந்து உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இனி பாத்ரூமுக்கு பயப்படாம போய்ட்டு வரலாம்

இனி பாத்ரூமுக்கு பயப்படாம போய்ட்டு வரலாம்

கைக்குழந்தையுடன் அல்லாடும் பெண்கள் பாத்ரூம் போகக் கூட பயப்படுவார்கள். ஆனால் இந்த பேபிகீப்பர் பேசிக் டிரஸ் அவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

எங்கும் போய் வரலாம்

எங்கும் போய் வரலாம்

அது மட்டுமல்லாமல் ஜிம், கடைகள் உள்பட எங்கு வேண்டுமானாலும் தைரியமாக போய் வர முடியும் என்பதே இந்த டிரஸ்ஸின் வசதியாகும்.

அப்படி என்ன இதில் விசேஷம்

அப்படி என்ன இதில் விசேஷம்

இது ஒரு சீட் பெல்ட் போல இருக்கிறது. இதை குழந்தையின் உடலில் அணிய வைத்து தூக்கிச் செல்லலாம். நமக்குத் தோதான ஒரு இடத்தில் சுவரில் அப்படியே தொங்கவும் விட்டுச் செல்லலாம். குழந்தை பத்திரமாக அதில் அமர்ந்திருக்கும்.

ஹூக் வைத்த ஜாக்கெட்

ஹூக் வைத்த ஜாக்கெட்

இந்த ஜாக்கெட் போன்ற உடையானது, இரண்டு ஹூக்குகளை மேலே கொண்டிருக்கிறது. அந்த ஹூக்குகளை அப்படியே சுவற்றின் மீது பொருத்தி விட்டால் போதும். பாப்பா, ஜாலியாக தொங்கிக் கொண்டிருக்கும். நமது வேலையை முடித்து விட்டு வரும் வரை பயமே தேவையில்லை.

6 முதல் 18 மாதக் குழந்தையை தொங்க விடலாம்

6 முதல் 18 மாதக் குழந்தையை தொங்க விடலாம்

இந்த நூதன தொங்கட்டான் டிரஸ் 6 மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகளுக்குப் பொருத்தமானதாகும்.

கண்டுபிடிச்ச சகோதரிகளுக்கு 10 பாப்பாவாம்...

கண்டுபிடிச்ச சகோதரிகளுக்கு 10 பாப்பாவாம்...

இந்த நூதன டிரஸ்ஸைக் கண்டுபிடித்த இரு சகோதரிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனராம். அதில் கிங்குக்கு 4 குழந்தைகளும், எலிசாவுக்கு 6 குழந்தைகளும் உள்ளனராம். தனது குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டபோதுதான் இப்படி ஒரு கண்டுபிடிப்பு குறித்து தனக்குத் தோன்றியதாகக கிங் கூறுகிறார்.

இப்போதைக்கு அமெரிக்காவில்

இப்போதைக்கு அமெரிக்காவில்

இந்த நூதன டிரஸ் இப்போதைக்கு அமெரிக்காவில்மட்டுமே கிடைக்கிறது. அதுவும் ஆன்லைனில். இதன் விலையாக 39.99 டாலர் நிர்ணயித்துள்ளனர்.

உங்களுக்கும் வேணுமா...

உங்களுக்கும் வேணுமா...

இது வேண்டுமானால் mommysentials.com போய் செக் பண்ணிப் பாருங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+