ஜெ.வைச் சந்தித்த சேந்தமங்கலம் சாந்தி ஒரு உதிர்ந்த துரு... தேமுதிக வர்னணை

இதுகுறித்து சந்திரகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
தேமுதிகவில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் போய்விட்டார்கள். ஆனால் 60 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 6 இலைகள் தான் உதிர்ந்துள்ளன. ஆனால் தேமுதிக என்ற ஆலமரம் தமிழகம் முழுவதும் வேரூன்றி பரவி வருகிறது.
விஜயகாந்த் கைகாட்டினார் என்பதற்காக மட்டுமே முகம் தெரியாத சாந்தியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். அதற்கு அவர் காட்டும் விசுவாசம் இதுதானா.
மிக பெரிய கப்பலில் துரு பிடித்த இடம் தானாக உதிர்வது போல தேமுதிக என்ற கப்பலில் இருந்து துரு உதிர்ந்து விட்டது. இதற்கெல்லாம் இந்த கப்பல் ஆடாது என்று கூறியுள்ளார் சந்திரகுமார்.
தேமுதிகவிலிருந்து இதுவரை மதுரை மத்திய தொகுதி சுந்தர்ராஜன், பேராவூரணி அருண்பாண்டியன், திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், செங்கம் சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நேற்று சேந்தமங்கலம் சாந்தியும் போய்ச் சேர்ந்து விட்டார்.












Click it and Unblock the Notifications