Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமானத்தில் பயணம் செய்ய தயாளுவின் உடல்நிலை உகந்தது அல்ல..: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Dont force Dayalu to appear the Court : Karunanidhi
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளின் உடல்நிலை உகந்தது அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் கலைஞர் டிவி மீதான வழக்கில் தயாளு அம்மாள் சாட்சியம் ஜுலை 8-ந் தேதிக்குள் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தயாளு அம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவரால் தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத ஒரு நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டதை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் உங்கள் துணைவியார், தயாளு அம்மாளை சாட்சியம் அளிக்க நேரில் வர விலக்கு அளிக்கக் கோரிய மனுவினை தள்ளுபடி செய்து, நேரில் வர வேண்டு மென்று சி.பி.ஐ. நீதி மன்றம் டெல்லியில் உத்தரவிட்டிருப்பதைப் பற்றி?

பதில்: பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி எப்போதும் நான் கருத்து தெரிவிப்பது இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் என் துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தியாகும். அவரால் விமானத்தில் பயணம் மேற்கொள்வதே முடியாது. ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிபதிக்கு முன்னால் இந்த விவரங்கள் நேரில் எடுத்துரைக்கப்பட்ட போதே, மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையிலே உள்ள மருத்துவர்கள் குழு நேரில் வீட்டிற்கே வந்திருந்து தயாளுவின் உடல் நிலையை பார்த்து அறிக்கை தரலாம் என்ற வேண்டுகோளினை நீதிபதி முன்பு வாதிட்டபோது, நீதிபதி அவர்களே எந்த மருத்துவமனை என்பது பற்றி கேட்டறிந்து; புதுவையில் உள்ள "ஜிப்மர்" மருத்துவமனை என்று கூறப்பட்டு; அந்த ஜிப்மர் மருத்துவ மனையிலிருந்து அந்த மருத்துவர்களை அழைத்து வரும் செலவினை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினையும் எழுந்து, அந்தச் செலவினையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி கூறப்பட்டு அதையெல்லாம் நீதிபதி அவர்கள் குறித்துக் கொண்டதோடு ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் வரும்போது எங்கள் குடும்ப மருத்துவரும் உடன் இருக்க அனுமதி கேட்டு அதுவும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது.

சி.பி.ஐ. தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டு,ஜிப்மர் மருத்துவ மனை டாக்டர்களே நேரில் வந்து பரிசோதிக்கலாம் என்று ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் இவ்வளவிற்கும் பிறகு இரண்டு நாட்கள் கழித்து சி.பி.ஐ. நீதிபதி தற்போது நேரில் வர வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி வழக்கறிஞர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேற்கொண்டும் என் மனைவி, நேரில் தான் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு, அதனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்?

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+