ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிட கெஜ்ரிவால் முடிவு
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதுதொடர்பாக இன்று நடந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நடைபெறவிருக்கிற டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸையும், பாஜகவையும் தீவிரமாக எதிர்த்துப் பிரசாரம் செய்வது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஷீலாவை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுடெல்லி தொகுதியில்நான் ஷீலாவை எதிர்த்துப் போட்டியிடவுள்ளேன். ஒரு வேளை எனக்குப் பயந்து வேறு தொகுதிக்கு ஷீலா மாறினால் நானும் மாறி அங்கு போட்டியிடுவேன் என்றார்.
கடந்த 1998ம் ஆண்டு முதல் டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார் ஷீலா. 98ல் அவர் கோல் மார்க்கெட் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் கீர்த்தி ஆசாத்தை தோற்கடித்தார். பின்னர் அடுத்து நடந்த தேர்தலில் பூனம் ஆசாத்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
தற்போது கோல் மார்க்கெட் தொகுதி நீக்கப்பட்டு விட்டது. இதனால் கடந்த தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் ஷீலா போட்டியிட்டு பாஜகவின் விஜய் கோயலை வீழ்த்தினார். இத்தொகுதியில்தான் வருகிற தேர்தலில் கெஜ்ரிவால் நிற்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications