அடப்பாவிகளா... கணவருடன் பைக்கில் சென்ற பெண் பஸ்சில் ஏறி தப்பினார்
திருவண்ணாமலை: விருப்மில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென அதிலிருந்து நைசாக இறங்கி சாலையில் போய்க் கொண்டிருந்த வேலூர் பஸ்சில் ஏறி தப்பினார். பைக்கில் உட்கார்ந்திருந்த மனைவி பஸ்சில் பயணித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கணவர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அண்ணாமலை.டெய்லராக இருக்கிறார். இவருக்கும் 22 வயதான மீனா என்பவருக்கும் திருமணம் நடத்தினர் இரு குடும்பத்தார். மீனாவுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை போலும்.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி தனது பெரியம்மா மகள் வீட்டுக்கு விருந்துக்காக மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கிளம்பினார் அண்ணாமலை. போளூர் டைவர்சன் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது வாகன நெரிசலில் சிக்கியதால் மோட்டார்சைக்கிளை மெதுவாக ஓட்டினார் அண்ணாமலை.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நைசாக இறங்கிய மீனா, சாலையில் போய்க் கொண்டிருந்த வேலூர் பேருந்தை நிறுத்தி ஏறி விட்டார். இதை அறியவில்லை அண்ணாமலை. ஆனால் அந்தப் பேருந்து தன்னைக் கடந்தபோது பஸ்சில், மீனா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். பிறகுதான் தெரிந்தது, பைக்கிலிருந்து மீனா இறங்கி தப்பிய விவரம்.
இதுகுறித்து போலீஸில் அவர் புகார் கொடுத்தார். மீனா, 20 பவுன் நகை மற்றும் ரூ. 5000 பணத்துடன் போய் விட்டதாக தெரிகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications