''பாவ் ஏக் ரூப்யா''... அப்படீன்னா இன்னான்னு தெரியுமா உங்களுக்கு?

ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக போலீசார் மும்பை கல்பாதேவி பகுதியில் திடீர் சோதனை நடத்தி 92 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதில் 30 போன்கள் பாகிஸ்தானுக்கு கால் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 போன்கள் துபாய்க்கு போன் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன.
போலீசார் வந்து கதவைத் தட்டியவுடன் தரகர் ரமேஷ் வியாஸ் ஒரு போன் செய்து பாவ் ஏக் ருப்யா என்று மட்டும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன் பிறகு போலீசார் தரகர்கள் ரமேஷ் வியாஸ், அசோக் வியாஸ் மற்றும் பாண்டுரங் கதம் ஆகியோரை கைது செய்தனர். ரமேஷ் வியாஸ் போனில் பேசியவுடன் தரகர்கள் நெட்வொர்க்கின் அனைத்து போன்களின் இணைப்பும் சில நொடிகளில் துண்டிக்கப்பட்டன.
தரகர்களின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்த டெல்லி போலீசாருக்கு திடீர் என்று அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது வியப்பளித்தது. இந்நிலையில் போலீஸ் விசாரணையில் ரமேஷ் வியாஸ் கூறுகையில், பாவ் ஏக் ருப்யா என்று கூறி தரகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தேன் என்றார்.
தரகர்கள் அனைவரும் உஷாரானதையடுத்து டெல்லி போலீசார் விரைந்து வந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா ஆகியோரை கைது செய்தனர். ஐபிஎல் போட்டிகள் முடியும் வரை காத்திருந்தால் மும்பை போலீசார் முந்திக் கொள்வார்கள் என்று நினைத்த டெல்லி போலீஸ் அவசர அவசரமாக வந்து அந்த 3 வீரர்களை கைது செய்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வியாஸ் கைதான உடனேயே அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால் மும்பை போலீசார் தான் பிக்ஸிங் குறித்து முதலில் அனைத்து விவரங்களையும் பெற்றிருப்பார்கள். ரமேஷ் வியாஸ் துபாய் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். வியாஸ் மூலம் தான் பாகிஸ்தான் தரகர்கள் இந்திய தரகர்களை தொடர்பு கொண்டுள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த வியாஸை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
-
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications