ஹய்யா... 'வாக்காளர்' பட்டியலில் சஸ்பெண்ட் ஆன 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இடம்!
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் பெயர்களும், ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்ற எம்எல்ஏக்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. அவர்கள் வாக்களிக்க தகுதி உண்டு என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை, சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி பெயர், எம்.எல்.ஏ. பெயர், அவருடைய முகவரி மற்றும் அவர் சார்ந்துள்ள கட்சி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டசபையிலிருந்து தேமுதிகவைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார், கே.நல்லதம்பி, அனகை முருகேசன், எஸ்.செந்தில்குமார், பி.பார்த்தசாரதி, ஆர்.அருள்செல்வன் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் ஆறு மாதங்களுக்கு எம்.எல்.ஏ.வாகப் பணியாற்ற முடியாது என சபாநாயகர் தனபாலும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இவர்கள் ராஜ்யசபா தேர்தலி்ல வாக்களிக்க முடியாது என்று ஒரு தரப்பும், வாக்களிக்க உரிமை உண்டு என தேமுதிக தரப்பும் கூறி வருகிறது.
இந்த நிலையில் வாக்களிக்கத் தகுதி பெற்ற எம்.எல்.ஏக்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தஆறு பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் இவர்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
தங்களுக்கு வாக்களிக்க அனுமதி கோரி இந்த ஆறு பேரும் ஏற்கனவே வழக்கும் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications