கேதார்நாத் வெள்ளத்தில் சிக்கியோரிடம் கொள்ளையடித்த ‘சாமியார்களே’.. திடுக்கிடும் தகவல்கள்!
கேதார்நாத்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் யாத்ரீகர்களிடமிருந்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்தவர்கள் ‘பாபா'க்கள் என்று வணங்கப்படுகிற சாமியார்களே என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட இமயமலை சுனாமி என வர்ணிக்கப்படும் பெருவெள்ளத்தில் சிக்கி அம்மாநிலமே உருக்குலைந்து போனது. இதில் குறிப்பாக ஆன்மீக தலமான கேதர்நாத் நகரமே முற்றிலும் நிர்மூலமானது. தற்போது அங்கி எஞ்சி இருப்பது கற்களால் கட்டப்பட்ட கோயில்மட்டும்தான்..

இந்நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது இத்தகைய படுபாதக கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாபாக்கள் என்று யாத்ரீகர்கள் இறைவனுக்கு சமமாக வணங்கக் கூடிய சாமியார்கள் என்பதை மீட்புப் பணியில் ஈடுபட்டோர் அம்பலப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இப்படி சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய சாமியார்களிடம் இருந்து சுமார் சேறும் சகதியுமாக நனைந்து போய் இருந்த ரூ1.25 கோடி பணம் கைப்பற்றபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கேதார்நாத்தில் இருந்த ஒரே ஒரு வங்கியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களின் பணப்பெட்டிகளும் வெள்ளம் வாரிச் சுருட்டியது. கேதார்நாத் கோயிலின் உண்டியலும் பொக்கிஷங்களும் கூட வெள்ளத்தால் திறந்துவிடப்பட்டன.
இந்நிலையில் மீட்புப் பணிக்காக வரிசையில் காத்திருந்த பல சாமியார்களிடம் புது நோட்டுகளும் இதுவரை பயன்படுத்தாத நோட்டுகளும் ஏராளமாக இருந்தன. அவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததில் பல ரூபாய் நோட்டுகள் கேதார்நாத் வங்கிக்குரியது என தெரியவந்தது என்கிறார் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர்.
இதேபோல் ஒரு பாபாபா தன்னுடைய டோலக் எனப்படும் டிரம்மில் ரூ62 ஆயிரம் பணத்தை பதுக்கி வைத்திருந்திருக்கிறார். மற்றொருவர் பிரசாத பாக்கெட்டில் ரூ10ஆயிரத்தை பதுக்கி வைத்திருந்தாராம்.. மற்றொரு சாமியார் தம்முடைய துணிகளுக்கு இடையே ரூ1.2 லட்சத்தை பதுக்கி இருந்திருக்கிறார். இன்னும் சில சாமியார்கள் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான நகைகளையும் வளையல்களையும் அணிந்து நடமாடியுள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை அனைத்துமே யாத்ரீகர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவையே என ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
இதில் உச்சகட்ட கொடூரம் என்னவெனில் சில சாமியார்கள் யாத்ரீகர்களின் விரல்களை வெட்டி நகைகளைக் கொள்ளையடித்திருக்கின்றனர் என்பதுதான்!
இவர்களை எப்படி வணங்குவது?
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications