தேமுதிக எம்.எல்.ஏக்களின் விசுவாசத்துக்கு டெஸ்ட்தான் ராஜ்யசபா தேர்தலில் போட்டியாம்!

தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏக்கள் இருந்த போதும் 7 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்குத் தாவிவிட்டனர். இதனால் 22 எம்.எல்.ஏக்கள்தான் தேமுதிகவுக்கு இருக்கின்றனர். இவர்களை வைத்து நிச்சயம் 6வது எம்.பி. இடத்தைக் கைப்பற்றிவிட முடியாது. இருப்பினும் 5 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ் ஆதரவை கோரி நிற்கிறது தேமுதிக. இதற்காக அக்கட்சியின் இளைஞரணிச் செயலர் சுதீஷ், டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.
இதுஒருபுறம் இருக்க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேருக்குமே விஜயகாந்த் கடிதமும் எழுதியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு தேதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கோயம்பேடு கட்சித் தலைமையகத்துக்கு அழைத்திருக்கிறார் விஜயகாந்த். அப்போது ராஜ்யசபா தேர்தல் குறித்தும் பேசிய போதுதான், உங்களில் யாரை நம்புவது என எனக்குத் தெரியவில்லை. உஙதளோடு விசுவாசத்தை டெஸ்ட் செய்யத்தான் இந்த தேர்தலிலேயே போட்டியிடுகிறோம் என்று கூறப் போய் எம்.எல்.ஏக்கள் பலரும் செம கடுப்பாகிப் போயினராம்.
இப்படியெல்லாம் பேசினா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அதிகமாவாங்களே கேப்டன்!












Click it and Unblock the Notifications