சென்னையில் துணிகரம்: அடகு கடையை உடைத்து 100 சவரன், ரூ.2.5 லட்சம் பணம் கொள்ளை
சென்னை: சென்னையில் நகை அடகுக் கடையை உடைத்து 100 சவரன் நகைகள், 2.5 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள எல்.பி சாலையில் சந்திரபிரகாஷ் என்பவர் அடகுகடையோடு ஆயுர்வேதிக் மருந்து கடையும் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டார் சந்திரபிரகாஷ்.
இந்த நிலையில், இன்று காலையில் சந்திரபிரகாசின் மகன் விஷாலை கடையை திறக்கும்படி அனுப்பினார். அப்போது, அங்கு சென்ற விஷாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆயுர்வேதிக் கடை உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது, அடகுக்கடையில் இருந்த 100 சவரன் நகைகள், 2.5 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சந்திரபிரகாஷ் திருவான்மியூர் காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications