குற்றாலத்தி்ல காய்த்துக் குலுங்கும் துரியன் பழங்கள்
குற்றாலம்: குற்றாலததில் சீசன் களை கட்டியுள்ளதை தொடர்ந்து அரிய வகை பழங்கள் வரதுவங்கியுள்ளன.
குற்றாலத்தில் குளியலை முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு செல்லும் சமயத்தில் செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாக இருக்கும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் அரிய வகை பழங்கள் அனைத்துமே குற்றாலத்தில் கிடைக்கிறது. கிலோ ஒன்று ரூ.500க்கு விற்கப்படும் துரியன் பழம் முதல் கொண்டு 5 ரூபாய்க்கு கிடைக்கும் வாழைப்பழம் வரை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம், ஸ்டார் புரூட், மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், வால்பேரி, பப்பாளி, திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ், ஆரஞ்ச் போன்ற ஏராளமான பழ வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் சுற்றுலா பயணிகளிடையே மங்குஸ்தான், ரம்ப்டான் பழங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
குறிப்பாக குற்றாலம் தெற்கு பகுதியில் விளையும் மங்குஸ்தான் பழத்திற்கு கிராக்கி அதிகமாக உள்ளது. கேரளா, ஊட்டி ஆகிய இடங்கலிலிருந்தும் மங்குஸ்தான் கொண்டு வரப்படுகிறது. மா வகைகளில் சப்பேட்டா, நீலம், அல்போன்ஸா, மங்களபள்ளி, என பல வகை பழங்கள் கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications