ரூபாய் மதிப்பு சரிவு.. மீண்டும் லிட்டருக்கு ரூ3-5 வரை உயருகிறது பெட்ரோல்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. தொடரும் ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இருக்கின்றன.
தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதுபோல டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்துவதற்கு பதில் மேலும் அதிகமாக உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் சமையல் கியாஸ் விலையும் கணிசமான அளவுக்கு உயரக்கூடும்.
அனேகமாக வரும் ஜூலை 1-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி விலை உயர்த்தப்பட்டால் பயணிகள், சரக்கு போக்குவரத்து கட்டணமும் மீண்டும் உயரலாம். காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்க்ள விலை உயரும் அபாயம் உள்ளது.
சிலிண்டர் விலையும் உயருகிறது:
இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் உயர்த்த வேண்டும் என மத்திய அரசை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவையும் இதற்கான அனுமதியை எந்த நேரத்திலும் வழங்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் உயர்த்தும் புதிய விலை கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்க உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டால் 2016, 2017 ஆம் ஆண்டிற்குள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.250 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications