For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’முஸ்லிம்கள் படுகொலையாளன்’ புத்த பிக்கு பற்றிய கட்டுரை...’டைம்’ ஏட்டுக்கு மியான்மர் தடை!!

By Mathi
Google Oneindia Tamil News

Myanmar bans Time magazine for story on extremist monk
யாங்கூன்: மியான்மர் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த புத்த பிக்குகளின் அமைப்பின் தலைவர் விராதுவை அட்டைப்படமாகக் கொண்டு வெளியிடப்பட்ட டைம் பத்திரிகையை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.

மியான்மர் நாட்டில் அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் அண்மையில்தான் தனியார் பத்திரிகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வார டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் விராது என்ற புத்த பிக்குவின் படத்துடன் அட்டைப்படக் கட்டுரை வெளியாகி இருக்கிறது.

இந்த புத்த பிக்குதான் மியான்மர் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்துக்கு தலைமை வகிப்பவர். இவர் தம்மை மியான்மரின் பின்லேடன் என்றை அழைத்துக் கொள்கிறவர். இவரைப் பற்றிய கட்டுரைக்கு தலைப்பாக "புத்தமத பயங்கரவாதத்தின் முகம் என்று டைம் பெயரிட்டிருக்கிறது.

1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டப்படி ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் மீது கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொடுந்தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. இந்த வன்முறைகளுக்கு தலைமை தாங்கும் புத்த பிக்குவான விராதுவுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முழு ஆதரவு அளிக்கின்றன.

இது தொடர்பாக விவரிக்கும் கட்டுரையைத்தான் ஜூலை 1-ந் தேதியிட்ட டைம் இதழ் பதிவு செய்திருந்தது. ஆனால் இந்த டைம் இதழை தடை செய்திருப்பதாக மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் இ ஹ்டுட் அறிவித்துள்ளார்.

English summary
The Myanmar government has banned this week’s issue of Time magazine because of its cover story, which is about an extremist Buddhist monk accused of promoting violence against Muslims in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X