2ஜி: காட்டிக் கொடுக்க கூடாது என்பதற்காகவே கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு- சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

Congress supported Kanimozhi in RS polls to save itself from 2G issue: Sarath Kumar
சென்னை: ஸ்பெக்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சியை காட்டிக் கொடுக்க கூடாது என்பதற்காகவே திமுகவைச் சேர்ந்த கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது குறி்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்ற ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக இருந்தது பலருக்கும் தெரியும்.

ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்பட வேண்டும், அதன் மூலம் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற இரு கட்சிகளின் சுயநலத்தைத் தவிர இந்த நிகழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?.

எண்ணிக்கை அடிப்படையில் கனிமொழி ஒருவேளை வெற்றி பெற்றாலும், நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழின விரோத காங்கிரஸ் கூட்டணியை புறமுதுகிட்டு ஓடச் செய்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமையும் கூட்டணிக்கு புதுவையுடன் சேர்த்து 40 இடங்களையும் வாக்காளப்பெருமக்கள் அளித்து ஏற்றமடையச் செய்வார்கள் என்பது உறுதி.

இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+