மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திடீர் இடமாற்றம்!: புதிய கலெக்டர் எல்.சுப்பிரமணியன்
சென்னை: மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டராக எல்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா வணிக வரித்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கலெக்டராக இருந்த சகாயத்தைத் தொடர்ந்து மதுரை கிரானைட் கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டி அந்தக் கும்பலை கதிகலங்க வைத்தவர் மிஸ்ரா. அதே போல ஆளும் தரப்பினரின் நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுக்காமல் இருந்து வந்தார். இந் நிலையில் அவரை அங்கிருந்து தூக்க ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களே தீவிர முயற்சியில் இறங்கினர். அதையும் மீறி இத்தனை நாட்களாக மதுரை கலெக்டராக நீடித்து வந்தார் மிஸ்ரா.
இந் நிலையில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த லில்லி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கே.விவேகானந்தன் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த விஜய் பிங்களே, சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஏ.ஞானசேகரன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட கலெக்டராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அன்சுல் மிஸ்ரா, வணிக வரித் துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை (செலவினம்) செயலாளராக டி.உதயச்சந்திரனும், காதி மற்றும் கைவினைத் துறை முதன்மை செயலாளராக ஹர்மந்தர் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications