உத்தரகண்டில் மீண்டும் மழை பெய்யுமாம்: 11,000 பேர் மாயம் என்கிறது ஐ.நா.
டேராடூன்: உத்தரகண்டில் மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11,000 பேர் மாயமாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சீர் குலைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 70 முதல் 130 மிமீ மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த மழையின் அளவோடு ஒப்பிடுகையில் இது குறைவு தான் என்றாலும் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உத்தரகண்டில் மாயமானவர்களின் எண்ணிக்கை 11,000 என்று ஐ.நா. ஏஜென்சி கணக்கிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பத்ரிநாத்தில் இருந்து 1,350 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 3,500 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. 3,500 முதல் 3,700 பேரைக் காணவில்லை என்று புகார்கள் உள்ள நிலையில் 11,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஐ.நா. ஏஜென்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 2,000ல் இருந்து 4,000 ஆக உயர்ந்துள்ளது.

பாலம் கட்டும் பணி
லம்பாகரில் உள்ள அலக்நந்தா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிய ராணுவத்தார் மற்றும் எல்லை சாலை அமைப்பினர்.

உயிர் பிழைத்தோம்
உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்டு ஜெய்பூர் வந்த யாத்ரீகர்கள்.

கேதர் பள்ளத்தாக்கு
கேதர் பள்ளத்தாக்கில் உள்ள சௌதி கிராமத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

உடல்கள் தேடிப்பிடிப்பு
கேதர்நாத்தில் பலியாகியவர்களின் உடல்களை தேடிப் பிடித்து எடுத்துச் செல்லும் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண ஆணையத்தினர்.

உடல்கள் எரிப்பு
கேதர்நாத்தில் பலியான யாத்ரீகர்களின் உடல்கள் ஒரே இடத்தில் வைத்து எரிக்கப்பட்டது.

பிரவீன்
கௌரிகுந்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான மதுரையைச் சேர்ந்த விமானி பிரவீனின் உடல் இருக்கும் பெட்டியைப் பார்த்து அழும் உறவினர்கள்.

மணல் சிற்பம்
உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கோரி ஒடிஷாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்த கலைஞர்.

ராகுல் காந்தி
உத்தரகண்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அமேத்தியைச் சேர்ந்த விமானி அகிலேஷ் குமாரின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

ராகுல் ஆறுதல்
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானி அகிலேஷ் குமாரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல் காந்தி.

அசோக் கெஹ்லாட்
உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜோத்பூரில் ஆறுதல் கூறும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்.

மீட்பு பணி
ஜோஷிமத்தில் யாத்ரீகர்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் செல்லும் ராணுவத்தினர்.

அறிவிப்பு பலகை
டேராடூன் விமான நிலைய வாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

பிரவீனின் உறவினர்கள்
மதுரை விமானி பிரவீனின் உடலை வாங்கச் சென்ற உறவினர்கள்.

விமானிகள்
விமானி பிரவீனின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி அருகே நின்று கொண்டிருக்கும் சக விமானிகள்.

வெட்டவெளியில் சமையல்
பகிரதி ஆற்று வெள்ளத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்பட்டதால் வெட்டவெளியில் சமையல் செய்யும் பழங்குடியினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications