மக்களை ஏமாற்றும் ஓர் அரசியல் சித்து விளையாட்டு: ஜெயலலிதா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அவசரச் சட்டம், அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டிய ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தின் அடிப்படையில் மாற்றங்களை செய்து நடவடிக்கை எடுக்காமல், அவசரச் சட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவது ஏழை மக்களை ஏமாற்றும் செயல்.
தற்போதைய வடிவில் உள்ள மசோதாவிற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதனை அவசர கதியில் நிறைவேற்றுவது ஏன்?.
மத்திய காங்கிரஸ் அரசின் செயல் ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கை. இந்த மசோதா " பதறும் காரியம் சிதறும் " என்ற பழமொழிக்கேற்ப அமையும்.,மத்திய அரசின் ஊழல்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மூடி மறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி படுதோல்வியில் முடியும் என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications