For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூர்: அதிமுக மாவட்ட பெண் நிர்வாகி திடீர் நீக்கம்!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முக்கிய பெண் நிர்வாகி ஒருவர் அதிரடியாக கட்சிப் பணியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பிச்சையம்மாள் (குளித்தலை நகரம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அதே போல, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பி.முனியம்மாள் (ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய மகளிர் அணிச்செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
AIADMK general secretary has dismissed the Karur district AIADMK lady member Pitchaiyammal from her party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X