கூடங்குளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும்...?
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் சில நாட்களில் மின்சாரம் உற்பத்தியாகத் தொடங்கும்.
அங்கு எப்படி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், எவ்வளவு உற்பத்தி செய்யப்படும், தமிழகத்திற்கு எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து இந்திய அணு சக்திக் கழகத் தலைவர் ஆர்.கே.சின்ஹா விளக்கியுள்ளார்.

டர்பன் இயங்க 1200 மெகாவாட் வெப்பம் தேவை
கூடங்குளம் அணுஉலை செயல்பட தொடங்கிய போதிலும் மின் உற்பத்தி செய்யும் டர்பன் இயங்குவதற்கு குறைந்தபட்சம் 1200 மெகாவாட் வெப்பம் அணுஉலைக்குள் இருக்கவேண்டும்.

அதற்கு ஒரு மாதமாகும்
இந்த 1200 மெகாவாட் வெப்பம் உருவாக 35முதல் 45நாட்கள் ஆகும்.

அதன் பின்னர் முதலில் 400 மெகாவாட் மின்சாரம்
அதன்பின் அந்த வெப்பஆற்றலை டர்பனில் செலுத்தி, 400 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும். அந்த மின்சாரம் தென் மண்டல மின்சார கிரிட்டில் இணைக்கப்படும்.

படிப்படியாக உயரும்
இதற்கு அடுத்தபடியாக 500 மெகாவாட், 750 மெகாவாட், 900மெகாவாட், 1000 மெகாவாட் என பல்வேறு நிலைகளாக மின்உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்படும். இந்த ஒவ்வொரு நிலைகளுக்கு இடையே இடைப்பட்ட காலம் 2 முதல் 3 வாரங்களாகும்.

தமிழகத்திற்கு 462 மெகாவாட் மின்சாரம்
கூடங்குளம் அணுமின் திட்டம் முதல் அணுஉலையின் மூலம் 1000மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்வாரியத்தில் இணைக்கப்பட உள்ளது. இதிலிருந்து தமிழகத்திற்கு 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றார் அவர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications