For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமரை சந்தித்த ப.சிதம்பரம்: பொருளாதார நிலை குறித்து ஆலோசனை

By Siva
Google Oneindia Tamil News

Chidambaram
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பொருளாதார நிலை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது அவர் ரூபாயின் வீழ்ச்சி, நாட்டின் பொருளாதார நிலைமை, இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் தான் வாஷிங்டன் சென்று வந்தது குறித்து பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் இன்று மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவை சந்தித்து பேசவிருக்கிறார்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு ரூ.60.005 ஆக குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 4.7 சதவீதமாக இருந்த மொத்த விலை குறியீட்டு எண் (wholesale price index) ஜூன் மாதத்தில் 4.86 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Faced with plummeting rupee woes, Finance Minister P. Chidambaram on Monday met Prime Minister Manmohan Singh to discuss the economic situation, even as RBI Governor D Subbarao has been called to deliberate on the strategy to tackle the problem. Chidambaram is understood to have discussed the rupee woes and macro economic situation with the Prime Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X