For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''ராசாத்தி.. நான் 'தம்' அடிக்கிறத விட்டுட்டேன்.. நீயும் சீக்கிரமா விட்டுடும்மா...!!''

Google Oneindia Tamil News

லண்டன்: புகை பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்களை விட பெண்கள்தான் அதை விட ரொம்பச் சிரமப்படுகிறார்களாம்.

ஆண்கள் கூட எளிதாக புகை பிடிப்பதை விட்டு விட முடிகிறதாம். ஆனால் பெண்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதாம்.

எல்லாம் மூளை படுத்தும் பாடுதான் இதற்குக் காரணம் என்பது லேட்ஸ்ட் ஆய்வு கூறும் தகவலாகும்.

கொஞ்சம் டைம் ஆகும் பாஸ்

கொஞ்சம் டைம் ஆகும் பாஸ்

பெண்களின் மூளைக்கும், ஆண்களின் மூளைக்கும் நிக்கோடினை புரிந்து கொள்வதில் வேறுபாடு இருக்கிறதாம். ஆண்களை விட பெண்களின் மூளை, நிக்கோடின் பாதிப்பை லேட்டாகத்தான் உணர்கிறதாம்.

ஒரு பப் . ஓராயிரம் உணர்வுகள்

ஒரு பப் . ஓராயிரம் உணர்வுகள்

ஒவ்வொரு முறை புகை பிடித்து உள்ளே இழுக்கும்போது, மூளையில் உள்ள நிக்கோடின் உணர்விகளின் எண்ணிக்கை, வேகமாக அதிகரிக்கிறதாம்.

ஆண்களுக்குத்தான் அதிகம்

ஆண்களுக்குத்தான் அதிகம்

ஆண்களுக்குத்தான் இந்த உணர்விகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதாம். பெண்களுக்கு அப்படி இல்லையாம்.

புகை பிடிக்காதவர்களுக்கு

புகை பிடிக்காதவர்களுக்கு

அதேசமயம், புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த உணர்விகள் கிடையாதாம்.

பெண்களுக்கும் அப்படியே

பெண்களுக்கும் அப்படியே

புகை பிடிக்காதவர்களுக்கு இருப்பதைப் போலவே, பெண்களுக்கும் இந்த நிக்கோடின் உணர்விகள் குறைவாகவே இருக்கிறதாம்.

அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை...

அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை...

மேலும் நிக்கோடினுக்கும் புகை பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கும் தொடர்பு இல்லை என்றும் சொல்கிறார்கள்.

வாசனைதான் பெரிய பிரச்சினை...

வாசனைதான் பெரிய பிரச்சினை...

சிகரெட் புகையின் வாசம் மற்றும் கையில் சிகரெட்டை பிடித்திருப்பது போன்ற சின்னச் சின்ன காரணங்கள்தான் அதை விடுவதில் உள்ள சிரமத்திற்கு முக்கியக் காரணமாம்.

ஆண்களால் ஏன் முடிகிறது...

ஆண்களால் ஏன் முடிகிறது...

இந்தஆய்வில் ஈடுபட்டவர்கள் ஆண்களுக்கு நிக்கோடின் பழக்கத்தை குறைப்பதற்கான பயிற்சிகளைக் கொடுத்தார்கள். அது பலன் கொடுத்ததாம். ஆனால் பெண்களுக்குப் பலன் தரவில்லையாம்.

பெண்களால் விட முடியாததற்கு காரணம்...

பெண்களால் விட முடியாததற்கு காரணம்...

பெண்களின் மூளையில் நிக்கோடின் உணர்விகள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு வேறு வகையிலான பயிற்சிகளையும், தெரப்பிகளையும் கொடுக்க வேண்டியிருந்ததாம்.

இதுதாங்க ஆண்களை விட பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை விட தாமதமாவதற்கு முக்கியமான காரணமாம்.

English summary
It's known that women find it a bit harder to kick the butt than men. Now, a new study has found why - it's because their brains respond quite differently to nicotine than male smokers. When a person smokes, the number of nicotine receptors in the brain - which bind to nicotine and reinforce the habit of smoking - are thought to increase in number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X