'வயாக்ரா சாப்பிடுங்கள், வெற்றிகளை அள்ளுங்கள்: ரஷ்ய அதிபர் புதின் கருத்தால் சர்ச்சை

ரஷ்யா கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், மூன்றாம் இடம் பிடித்த ஜப்பான் மாணவர்கள் 24 பதக்கங்களையும் இரண்டாம் இடம் பிடித்த சீன மாணவர்கள் 26 பதக்கங்களையும் வென்றனர்.
155 தங்கப் பதக்கங்களை வென்று, ரஷ்ய மாணவர்கள் முதல் இடத்தை பெற்றிருந்த போதும், வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் விமர்சித்தன. இந்நிலையில், பதக்கம் வென்ற ரஷ்ய மாணவர்களுக்கு தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் தலைமை தாங்கிப் பேசிய புதின், ‘இதைப் போன்ற மிகப்பெரிய வெற்றிகளை நாம் பெற்றிருந்தாலும், சிலர் நம்மை குறை கூறி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் இதைப்போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன். உடல் நல குறைபாடு ஏதுமிருந்தால் டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும். 'வயாகரா' சாப்பிடுவது கூட அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்' எனத் தெரிவித்திருந்தார்.
புடினின் வயாக்ரா அறிவுரையால் எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். அதிபராக இருந்து கொண்டு இவ்வாறு பொறுப்பற்று பேசுவதா என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications