நல்லா கனமாத்தாய்யா பொறந்திருக்கான் டயானா பேரன்... !

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்குப் பிறந்துள்ள ஆண் குழந்தை நல்ல எடையுடன் பிறந்துள்ளதாம். கடந்த 100 ஆண்டுகளில் யாரும் அதிகமான எடையுடன் இங்கிலாந்து ராஜகுடும்பத்தில் பிறந்ததில்லையாம்.

இளவரசர் வில்லியம்- கேட் தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தையை இங்கிலாந்து மக்கள் கொண்டாடி வரும் நிலையில், புதிய குழந்தை குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது குழந்தையின் எடை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நல்ல எடையுடன் உள்ளதாம். அதாவது கிட்டத்தட்ட 4 கிலோ அளவுக்கு குழந்தை உள்ளதாம்.

100 ஆண்டுகளில் முதல் முறையாக

100 ஆண்டுகளில் முதல் முறையாக

கடந்த 100 ஆண்டுகளில் ராஜ குடும்பத்தில் யாருமே இந்த அளவுக்கு அதிக எடையுடன் பிறக்கவில்லையாம்.

சற்றே கூடுதல் எடையுடன்

சற்றே கூடுதல் எடையுடன்

குழந்தையின் எடை 3.79 கிலோ என்று தகவல்கள் கூறுகின்றன. இது சராசரி எடை அளவை விட சற்று அதிகம்தான். வழக்கமாக குழந்தையின் நார்மல் எடையானது 3.7 கிலோ ஆகும்.

அப்பா கூட இவ்ளோ வெயிட் இல்லையேப்பா...

அப்பா கூட இவ்ளோ வெயிட் இல்லையேப்பா...

இளவரசர் வில்லியம் பிறந்தபோது அவரது எடை இரண்டரை கிலோ அளவுக்குத்தான் இருந்தாராம். வில்லியமின் தாத்தா பிறந்தபோது 3 கிலோ அளவுக்குத்தான் இருந்தாராம்.

ரொம்ப குண்டெல்லாம் கிடையாது

ரொம்ப குண்டெல்லாம் கிடையாது

அதேசமயம், குழந்தையின் எடையானது மிகவும் அதிகம் என்று கூறி விட முடியாது. சற்றே எடை கூடுதல் அவ்வளவுதான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆரோக்கியமான குழந்தை

ஆரோக்கியமான குழந்தை

நல்ல எடையுடன் குழந்தை பிறந்திருப்பது உண்மையில் நல்ல விஷயம்தான். ஆரோக்கியமான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை இது என்பதை இக்குழந்தை நிரூபித்துள்ளது என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

சித்தப்பா எடை தெரியுமோ....?

சித்தப்பா எடை தெரியுமோ....?

குழந்தையின் சித்தப்பா ஹாரி பிறந்தபோது அவர் 3 கிலோவுக்கு அருகில் இருந்தாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+