ஜிகு.ஜிகு.ஜிகு.. சென்னையில் சீக்கிரமே ஓட வருது மோனோ ரயில்...!
சென்னை: மோனோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரூ. 8500 கோடி முதலீட்டில் இந்த திட்டப் பணிகளை விரைவுபடுத்தி, முடுக்கி விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறாராம்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே ஏதாவது ஒரு வழித்தடத்தில் மோனோ ரயிலை இயக்கி விட வேண்டும் என்றும் அவர் தீவிரம் காட்டி வருகிறாராம்.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த திட்டம்தான் இந்த மோனோ ரயில். பட்ஜெட்டிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 வழித்தடங்களில்
வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு பாதை.. பூந்தமல்லி முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை 16 கிலோமீட்டர் தூரத்திற்கு 2வது பாதை. மற்றும் பூந்தமல்லி முதல் வட பழனி வரை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு 3வது பாதை என மொத்தம் 3 வழித்தடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.

நாலு நிமிஷத்திற்கு ஒரு ரயில்
இரு மார்க்கத்திலும் நான்கு நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையில் இந்த மோனோ ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர்ப் பகுதிகளுக்கு வரப் பிரசாதம்
மோனோ ரயிலின் முக்கிய நோக்கமே நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண்பதுதான் என்பது அரசின் வாதம். குறிப்பாக புறநகர்ப் பகுதி மக்களுக்கு இந்த மோனோ ரயில் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்றும் அரசு கருதுகிறது.

லோக்சபா தேர்தலுக்குள்
3 மார்க்கங்களில் லோக்சபா தேர்தலுக்குள்ளாகவே ஒரு மார்க்கத்திலாவது ரயிலை ஓட்டி விட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறாராம்.

ஒரு வருடமாக இழுபறி
ஆனால் திட்டப் பணிகள் கடந்த ஒரு வருடமாகவே இழுபறியாக உள்ளன. குறிப்பாக ஒப்பந்ததாரர்களை முடிவு செய்யும் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளது.

அவசர கூட்டம்
இந்த நிலையில் மோனோ ரயில் பணிகளை முடுக்கி விட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஒரு மணி நேரம் இக்கூட்டம் நடந்தது.
விரைவில் மோனோ ரயில் திட்டப் பணிகளை தொடங்கி விரைவுபடுத்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications