For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் இனி சந்தோஷமாக 'குப்பையைக் கொட்டலாம்'!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரை குப்பைகளே இல்லாத நகரமாக்கப் போவதாக கர்நாக மாநில அரசு அறிவித்துள்ளது.

எங்குமே குப்பை இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதே அரசின் திட்டமாகும்.

6 மாதங்களுக்குள் குப்பைகளே இல்லாத நகரம் என்ற பெயரை பெங்களூர் பெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

22 வார்டுகளில் தொடக்கம்

22 வார்டுகளில் தொடக்கம்

பெங்களூர் மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளில், 22 வார்டுகளில் இந்த ஜீரோ குப்பை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

6 மாதத்தில் நகர் முழுவதும்

6 மாதத்தில் நகர் முழுவதும்

ஆறு மாதங்களில் அனைத்து வார்டுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

ஒரு வீட்டுக்கு ரெண்டு குப்பைத் தொட்டி

ஒரு வீட்டுக்கு ரெண்டு குப்பைத் தொட்டி

இந்த ஜீரோ குப்பைத் திட்டத்திற்கு ஒரு வீட்டுக்கு ரெண்டு குப்பைத் தொட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர் அதிகாரிகள்.

தொடங்கி வைத்தார் சித்தராமையா

தொடங்கி வைத்தார் சித்தராமையா

இந்தத் திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.

தினசரி 5000 டன் குப்பை

தினசரி 5000 டன் குப்பை

திட்டத்தைத் தொடங்கி வைத்து சித்தராமையா பேசுகையில், பெங்களூரில் கிட்டத்தட்ட 1 கோடிப் பேர் வசிக்கிறார்கள். தினசரி 5000 டன் கழிவுகள் வெளியாகின்றன. எனவே மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

உடைகிறது மாநகராட்சி

உடைகிறது மாநகராட்சி

மேலும் அவர் கூறுகையில், நிர்வாக வசதிக்காக பெங்களூர் மாநகராட்சியை இரண்டாகப் பிரிக்கும் திட்டமும் உள்ளதாக தெரிவித்தார் சித்தராமையா.

English summary
The Karnataka government and the Bangalore civic authorities Wednesday launched a drive to make Bangalore a zero-garbage city in six months. The drive was launched in 22 of the city's 198 wards and would cover the entire capital in six months. Aimed to encourage segregation of waste into wet and dry at the source itself, the campaign has been aptly named "One house, two bins".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X