For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 12ல் மேட்டூர் அணை திறப்பு: ஜெ. உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Mettur Dam
சென்னை: சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 12ம் தேதி முதல் மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அணை திறக்கப்பட வேண்டும். மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஒருமாத காலமாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கு அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக அணையை திறக்க வலியுறுத்தினர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள்

இதனையடுத்து மேட்டூர் அணையை ஆகஸ்ட் 12ம் தேதி திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் கரூர், திருச்சி மாவட்ட பாசன பகுதிகளில் 2.40லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 6.95 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், கடலூர் மாவட்டத்தில் 57ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும், கல்லணை பாசன பகுதிகளில் 2.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், பெண்ணாறு பாசன பகுதிகளில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடையும்.

ஆடிப்பெருக்கு விழா

தற்போது குடிநீர் தேவைக்காகவும், மின்சார உற்பத்திக்காகவும் 3000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு அன்று தண்ணீரின் தேவை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக 3 ஆயிரம் கன. அடி தண்ணீரை இன்று முதல் ஆகஸ்ட்2-ம் தேதி வரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Aimed at ensuring substantial yield during the Samba season, Chief Minister J Jayalalithaa on Saturday announced Mettur dam would be opened for Samba season from August 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X