தெலுங்கானா.. இறுதி முடிவெடுக்க ஜூலை 31ம் தேதி கூடுகிறது ஐ.மு. கூ. ஒருங்கிணைப்புக் குழு

தெலுங்கானா விவகாரம் மிகப் பெரிய தலைவலியாகியுள்ளது காங்கிரஸுக்கு. புதிய மாநிலம் அமைக்க ஆந்திர மாநில காங்கிரஸுக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு காணப்படுகிறது. அதேசமயம், புதிய மாநிலத்தை அமைக்காவிட்டால் தெலுங்கானா பகுதியில் வரும் லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸால் வெல்ல முடியாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவை எடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளது. ஜூலை 31ம் தேதி புதன்கிழமையன்று இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டமும் இதுகுறித்து விவாதிக்கவுள்ளது.
தெலுங்கானாவை அமைக்கக் கூடாது என்று கோரி காங்கிரஸில் தற்போது புயல் கிளம்பியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கான எதிர்ப்பு காங்கிரஸ் எம்.பிக்களான மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜு, கே.எஸ்.ராவ், சிரஞ்சீவி, புரந்தரேஸ்வரி, பாபிராஜு, அனந்தராமி ரெட்டி ஆகியோர் பிரதமரைச் சந்தித்து ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திரா பிளவுபட்டால் அது ஆந்திராவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications