For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரம்ஜான்: 30 லட்சம் உலகக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய துபாய் மன்னர்

Google Oneindia Tamil News

Dubai's ruler gives clothes to 3 million children on Ramadan
துபாய்: அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, வறுமையில் வாழும் 3 மில்லியன் உலகக் குழந்தைகளுக்கு இலவச ஆடைகள் வழங்கினார் துபாய் மன்னர்.

தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அடுத்த வாரம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதனையொட்டி, ஐக்கிய அரபுக் குடியரசின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடைகள் தர விரும்பினார்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 11-ம்தேதி துவங்கப்பட்ட இந்த மனித நேயத்திட்டமானது, கடந்த திங்களன்று முடிவடைந்தது. அன்று ஐக்கிய அரபுக் குடியரசை நிறுவிய ஷேக் சயீத் பின் சுல்தானின் ஒன்பதாவது நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்தநாள் சயீத் மனிதநேய நாளாகக் சிறப்பிக்கப்படுகிறது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது ஐக்கிய அரபுக் குடியரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம். அதில், ‘ஷேக் முகமதுவின் நன்கொடை பெறுபவர்கள் எண்ணிக்கை ஆரம்பத்தில் 1.5 மில்லியனாக இருந்ததாகவும் பின்னர் அது இரட்டிப்பாகியுள்ளது' என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துபாயின் அரசியல் அமைப்பின் மன்னராகவும் உள்ள ஷேக் முகமது, ‘தாராள மனம் கொண்ட ஐக்கிய அரபுக் குடியரசின் மக்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கு கொண்டதன் விளைவாக இந்தப் புனிதத் திருநாள் மூன்று மில்லியன் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதன்மூலம், அறத்தொண்டுகளின் தலைநகராக ஐக்கய அரபுக் குடியரசு தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றது' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Dubai's ruler has distributed clothes to three million underprivileged children in 25 countries, including India, under a humanitarian campaign launched during the Muslim Holy month of Ramadan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X