தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம்தான் நம்பர் 1

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தேசிய குற்றத் தடுப்பு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம், மன அழுத்தம் மற்றும் மன சிதைவு காரணமாக தற்கொலை எண்ணம் தூண்டப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என்ற நிலையிலும், நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நாடு முழுவதும்...

நாடு முழுவதும்...

தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுவே 2010ம் ஆண்டு 1,35,585 பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர்.

தமிழ்நாடு நம்பர் 1

தமிழ்நாடு நம்பர் 1

தமிழ்நாட்டில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

தமிழகத்திற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா கர்நாடக போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த 5 மாநிலங்களில் மட்டும் 55.3 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாண்டிச்சேரியில் தற்கொலை

பாண்டிச்சேரியில் தற்கொலை

நாட்டின் தலைநகரமாக உள்ள டெல்லியில் 1899 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல் பாண்டிச்சேரியில் 541 பேர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.

தற்கொலை ஏன்

தற்கொலை ஏன்

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 7 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதகாலமாகவே இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு குடும்பப் பிரச்னை, பொருளாதார சூழல், காதல் தோல்வி எனப் பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஒரு மணி நேரத்தில்...

ஒரு மணி நேரத்தில்...

இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 15 பேரும், ஒரு நாளில் 371 பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

மனஅழுத்தம் காரணமா?

மனஅழுத்தம் காரணமா?

மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம், மன அழுத்தம் மற்றும் மன சிதைவு காரணமாக தற்கொலை எண்ணம் தூண்டப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்கொலை எண்ணம் வரும்போது அந்த எண்ணத்தை மாற்ற மனதை திசை திருப்பும் செயல்களில் ஈடுபடவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Suicide, an act of taking one’s own life, is no more an odd issue in India today as the country is witnessing 1 suicide in every two hours. As per the 2012 National Crime Records Bureau (NCRB) report on Accidental Deaths and Suicides in India, the rate of suicide might have decreased by 0.1 percent in 2012 as compared to the past decade, still more than one lakh people cut short their own lives by committing suicide.
Please Wait while comments are loading...