தூத்துக்குடியில் நகை அடகு நிறுவனத்தை உடைத்து 135 பவுன் நகை கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடியில், நகை அடகு நிறுவனத்தை உடைத்து 135 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இந்நிறுவனத்திற்கு அருகில் இருந்த இரு வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்தவர் திருமணி. இவர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயராஜ் சாலையில் அபி அசோசியேட்ஸ் என்ற பெயரில் தங்க நகை அடகு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை அலுவலகத்தை திறக்கவந்த திருமணி அலுவலகத்தின் இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தின் உள்ளே இருந்த சுமார் 135 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தகவல்அறிந்த தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி பெஸ்கி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவஇடத்திற்கு மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளை குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் நடந்துள்ள இடத்திற்கு அருகேயுள்ள இருவீடுகளிலும் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications