கணவரை சேர்த்து வைக்க கோரி போராடிய பெண் மீது திருட்டு வழக்கு
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணத்தில் கணவரை சேர்ந்து வைக்க கோரி கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருந்து வந்த பெண் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகணேஷ். பெங்களுரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாளையங்கோட்டையை சேர்ந்த சாந்தி என்பவருககும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆனால் ஓரே மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பாளையில் தந்தையுடன் இருந்த சாந்தி தனது கணவருடன் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் முத்துகணேஷ் வீட்டுக்கு வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்துகணேஷ் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு சென்று விட்டார்.
ஆனால் சாந்தி விடாப்பிடியாக கணவருடன் சேர்ந்து வாழ கணவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் முத்துகணேசின் குடும்பத்தினர் ஊருக்கு திரும்பினர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்களையும், வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களையும் சாந்தியும், அவரது தநதையும் திருடி விட்டதாக முத்துகணேஷ் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து விஜயநாராயணம் போலீசார் சாந்தி மீதும், அவரது தந்தை முத்தையா, அவரது மகன், மகள், மனைவி மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications