மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் - வெங்கையா
ஹைதராபாத்: நரேந்திர மோடிதான் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று நடந்த பாஜக லோக்சபா தேர்தலுக்கான முதல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தி்ல கிஷன் ரெட்டி உரையாற்றினார்.
ரெட்டி பேசுகையில், சர்தார் வல்லபாய் படேலுக்கு நிகரானவர் மோடி. ஆந்திர மாநிலம் தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளது. முதல்வர் கிரண் ரெட்டி, கடந்த 15 நாட்களாக வேலையே செய்யாமல் இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார் அவர்.
மேலும் அவர் பேசுகையில், மோடி ஹைதராபாத் வருகிறார் என்பதை அறிந்துதான் உடனடியாக தெலுங்கானா தனி மாநில பிரிவினையை அறிவித்தது.

குஜராத்தைப் போல சீமாந்திரா மற்றும் தெலுங்கானாவை நாங்கள் உருவாக்குவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இரு பிராந்தியங்களின் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை அறிவிப்போம் என்றார் அவர்.
வெங்கையா நாயுடு
மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், காங்கிரஸ் கட்சி பல்வேறு பிரச்சினைகளில் மக்களைப் பிரிக்கும் வகையில் செயல்படுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தை தனது சுயநலனுக்காக 3 பகுதிகளாகப் பிரித்து வி்ட்டது காங்கிரஸ். நாட்டின் எந்த மூலைக்குப் போனாலும், அங்கு காங்கிரஸ் ஆட்சி அகல வேண்டும் என்ற பேச்சுதான் நிலவுகிறது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரே கட்சி பாஜக மட்டுமே.
மோடி ஒரு 3டி.. பன்முகம், முடிவில் உறுதி, வளர்ச்சி ஆகியவையே அவை. சிபிஐ இப்போது காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் ஆகி விட்டது. மோடிக்கு எந்த அளவுக்கு நெருக்கடி தர முடியுமோ அதை அவர்கள் செய்து பார்த்து விட்டனர்.
பாஜகவின் கொள்கைகள் - முதலில் நாடு, பிறகு கட்சி, சுயநலம் கடைசிதான். ஆனால் காங்கிரஸின் கொள்கைகள் - முதலில் சுயநலம், பிறகு கட்சி, கடைசியாகத்தான் நாடு.
இளைஞர்கள் எல்லாம் மோடி மோடி என்றே முழங்குகிறார்கள்.. காங்கிரஸும் கூட மோடி மோடி என்றுதான் பேசி வருகிறது.
ஐக்கிய கூட்டணியில் ஒற்றுமை இல்லை.. தேசிய கூட்டணியில் இலக்கு இல்லை.. மூன்றாவது அணி ஒரு மூன்றாம் தர அணியாக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications