தூத்துக்குடியி்ல்... 67வது சுதந்திர தினம்.. கோலாகல கொண்டாட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 67வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 67வது ஆண்டு சுதந்திர தினவிழா மாவட்ட கலெக்டர் அலுவலக பெருத்திட்ட வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் ரவிக்குமார் வேளாண்மைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த 55 பயனாளிகளுக்கு ரூ.5லட்சத்து 18ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் துரை, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரானர் துறைமுகத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. துறைமுக மைதானத்தில் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் மேயர் சசிகலாபுஷ்பா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமங்கள் என அனைத்து பகுதிகளில் நாட்டின் 67வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications