தூத்துக்குடி: வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் கைது
தூத்துக்குடி: கடல்தாது மணல் கொள்ளை தொடர்பான அரசின் ஆய்வு வெறும் கண்துடைப்பாக இல்லாமல் தவறு செய்தவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தூத்துக்குடியில் இன்று வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற தமிழர் வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதுடன், ஜனநாயகத்திற்கு விரோதமாக கொடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இலங்கை ராணுவத்தினை கண்டிக்காத மத்திய அரசு மீனவர்கள் தங்ளைத்தானே பாதுகாத்துக்கொள்ள அவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும். மேலும் தமிழக மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவை மீட்கவேண்டும்.
எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கப்பட்ட டாக் தொழிற்சாலை கடந்த 6மாத காலமாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில் இதனை நம்பி வாழ்ந்துவரும் மறைமுக தொழிலாளர்கள் என 3ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்தவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளது. ஆய்வுக்குழு கொடுக்கும் அறிக்கையினை பெற்று அரசு சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவர்கள் முறைகேடாக சம்பாதித்த அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும். இந்த ஆய்வு வெறும் கண்துடைப்பாக இல்லாமல் தவறு செய்தவர்களுக்கு பாடமாகவும், படிப்பினையாகவும் இருக்கவேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து வேல்முருகன் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 200க்கும் மேற்ப்பட்டவர்களை டி.எஸ்.பி., பெஸ்கி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications