For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ தலைநகரமாக சென்னை உருவெடுத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு வெள்ளி விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

விழாவுக்கு கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான முனைவர் கே.ரோசய்யா தலைமை தாங்கினார். விழாவில் மருத்துவ துறையில் சிறந்து விளங்கிய டாக்டர்கள் சம்சுதீன், சந்திரசேகரன், ராமதாஸ் ஆகிய 3 பேருக்கும் கவர்னர் ரோசய்யா கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக பட்டமளிப்பு வெள்ளி விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் 2வது பெரிய மருத்துவ பல்கலைக்கழகமான எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ கல்வியில் சர்வதேச தரத்தை எட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மருத்துவ மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்ற நிலைமை மாறி இன்று தமிழகத்திலேயே உயர்கல்வி பெரும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ தலைநகரமாக சென்னை உருவெடுத்துள்ளது என்று ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

CM's address at silver jubilee convocation of Tamil Nadu Dr. MGR Medical Varsity

பட்டமளிப்பு விழாவில் மருத்துவ படிப்புகள், முதுநிலை மருத்துவ படிப்புகள், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்பு கள் முடித்த 11864 பேர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மருத்துவ படிப்பில் சிறந்து விளங்கியோர் உள்பட 149 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

English summary
The Tamil Nadu Dr. M.G.R. Medical University is committed to excellence and is emerging as a veritable powerhouse for harnessing top quality health professionals, and as a hub of biomedical research said TN CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X