சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்து 5 பேர் காயம்... போலீசார் வழக்குப் பதிவு
சிவகாசி: சிவகாசி அருகே திங்கள்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
சிவகாசி அருகே முதலிப்பட்டியில் தேசிங்குராஜன் என்பவருக்கு பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில் இன்று பட்டாசுகளை தயாரித்து பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
பட்டாசுகளை பேக்கிங் செய்யும்போது, ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திரிசங்கு (38), முருகேஸ்வரி, தமிழ்செல்வி, அழகுமணி, வீரம்மாள் ஆகிய 5 பெண்களுக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
காயமடைந்த 5 பெண்களும் உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட பயங்கர வெடிவிபத்தில் 38 பேர் உடல் கருகி பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.துரைசாமிபுரம் பட்டாசு ஆலையில் நேற்று நடந்த விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications