For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓணம், வேளாங்கண்ணி திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ஓணம் வந்தல்லோ..

ஓணம் வந்தல்லோ..

''ஓணம் மற்றும் வேளங்கண்ணி திருவிழாக்களை முன்னிட்டு பயணிகளின் கூட்டத்தை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) முதல் தொடங்கியுள்ளது.

சென்னை - மங்களூர்

சென்னை - மங்களூர்

சென்னை சென்ட்ரல் - மங்களூர் ஜங்சன் அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06003), சென்னையில் இருந்து செப்டம்பர் 14, 21 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் பகல் 12.45 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

மங்களூர் - சென்னை

மங்களூர் - சென்னை

இதேபோல மங்களூர் ஜங்சன் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06004), மங்களூரில் இருந்து செப்டம்பர் 15, 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு சென்னை வந்தடையும்.

நாகர்கோயில் - வேளாங்கண்ணி

நாகர்கோயில் - வேளாங்கண்ணி

நாகர்கோயில் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (ரயில் எண் 06302), ஆக. 27-ஆம் தேதி பகல் 2 மணிக்கு நாகர்கோயிலில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணி சென்றையும்.

வேளாங்கண்ணி -நாகர்கோவில்

வேளாங்கண்ணி -நாகர்கோவில்

இதேபோல, வேளாங்கண்ணி - நாகர்கோயில் சிறப்பு ரயில் (ரயில் எண் 06301), ஆக. 28-ஆம் தேதி பகல் 1 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 2.45 மணிக்கு நாகர்கோயில் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில்:

சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில்:

சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில் சிறப்பு ரயில் (ரயில் எண் 06005), சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 7-ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.

நாகர்கோவில்- சென்னை

நாகர்கோவில்- சென்னை

இதேபோல, நாகர்கோயில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (ரயில் எண் 06006), நாகர்கோயிலில் இருந்து செப்டம்பர் 8-ஆம் தேதி பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

English summary
Southern Railway has announced three special trains between Chennai-Mangalore, Nagercoil-Velankanni and Chennai-Nagercoil to clear the rush of passengers during Onam and Velankanni festival seasons
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X