For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழனி முருகன் கோவிலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.. அங்கேயே துணிப் பை தருவார்களாம்

Google Oneindia Tamil News

பழனி: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. அதற்குப் பதிலாக கோவிலிலேயே இலவசமாக துணிப் பைகள் தருகின்றனர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தத் தடையை கொண்டு வந்துள்ளது.

கோவிலுக்கு வருவோர் இனிமேல் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைக் கொண்டு வரக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில்

கோவில் வளாகத்தில்

முருகன் கோவில் வளாகத்தில் எந்தப் பகுதியிலும் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வரக் கூடாது, பயன்படுத்தக் கூடாது என்று தடை உத்தரவு கூறுகிறது.

பிளாஸ்டிக் பைகளால் பெரும் குப்பை

பிளாஸ்டிக் பைகளால் பெரும் குப்பை

முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றான இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கானோர் தினசரி வருகின்றனர். இவர்கள் போட்டு விட்டுப் போகும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளால் பெரும் குப்பை சேர்ந்து விடுகிறது.

இனிமேல் கூடாது

இனிமேல் கூடாது

எனவேதான் கோவில் வளாகத்துக்குள் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளைப் பயன்படுத்தத் தடை கொண்டு வரப்பட்டுள்ளது.

துணிப் பைகள் மட்டுமே

துணிப் பைகள் மட்டுமே

கோவி்ல் வளாகத்திற்குள் துணிப் பைகளை மட்டுமே கொண்டு வந்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலிலேயே இலவசமாக

கோவிலிலேயே இலவசமாக

மேலம் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வருவோர் அதற்குப் பதில் இலவசமாக கோவிலிலேயே துணிப் பைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகமும் அறிவித்துள்ளது.

English summary
TN pollution control board has banned usage of plastic bags in Palani temple. Instead temple administration will issue cloth bags in the temple campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X