இந்திய பொருளாதார சரிவு சாதாரணமானது...: சொல்கிறார் நாராயணசாமி

இந்திய ரூபாய் மதிப்பு பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோ மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டிருக்கிறது,.
இது பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன்சிங்கோ, நமக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்கிறார். மத்திய நிதிஅமைச்சரோ, இந்த நெருக்கடிக்கு முன்னாள் நிதி அமைச்சரான தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியே காரணம் என்கிறார்.
ஆனால் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியோ, இந்த பொருளாதார சரிவெல்லாம் சாதாரணமானது என்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 2 மசோதாவும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.சர்வதேச சந்தையில் சீனா, ஜப்பான் நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு சாதாரணமானதுதான். இதில் இருந்து மீண்டு வர அனைத்து கட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி படிப்படியாக சரி செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications