நிருபர் பலாத்காரம்: குற்றவாளிகள் ரெகுலராக நீலப்படங்களை படங்களை பார்ப்பவர்களாம்!விசாரணையில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் புகைப்பட நிருபர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேர் ரெகுலராக நீலப்படங்களை பார்ப்பவர்கள் என்றும், விபச்சார விடுதிக்கு செல்பவர்கள் என்றும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மும்பையில் சக்தி மில் பகுதியில் நடந்த பலாத்கார சம்பவ குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Mumbai gang rape: Three accused watched porn regularly, cops say

இதில் விஜய், காசிம், உள்ளிட்ட 3 பேர் ரெகுலராக ஃபோர்ன் படங்களை பார்ப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதோடு மும்பையில் விபாச்சார விடுதிகளுக்கும் அடிக்கடி சென்று வருபவர்கள் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

மதன்புரா பகுதியில் தடைசெய்யப்பட்ட நீலப்படங்களை சென்று பார்த்த காரணத்தினால்தான் பாலியல் குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபட காரணமாக அமைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

மதன்புரா பகுதியில் மட்டும் சட்டத்திற்கு புறம்பான வகையில் நீலப்படங்களை ஒளிபரப்பும் இடங்கள் உள்ளதாகவும் நாள்தோறும் 10 காட்சிகள் வரை ஒளிபரப்புகின்றனர். ஒவ்வொரு பார்லரிலும் 50 முதல் 80 பேர்வரை தினசரி இதுபோன்ற ஃபோர்ன் படங்களை பார்க்கின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத பார்லர்களை ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனிடையே மும்பை மாநகர கமிஷனர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்ட விரோதமாக நீலப்படம் ஒளிபரப்பும் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. நகர்பகுதிகளில் பாழடைந்த இடங்களில் அமர்ந்து போதை வஸ்துகளை உபயோகித்த 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+