உள் மாவட்டங்களில் மழை பெய்யும்னு சொன்னாக... சென்னையில் வெயில் மண்டையைப் பொளக்குது!
சென்னை: தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தலைநகர் சென்னையில் வெயில் மண்டையைப் பிளக்கிறது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,

குமரிக்கடல் பகுதிக்கு மேல் இருந்த மேல் அடுக்கு சுழற்சி மறைந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மாலை நேரத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றார்.
காலையிலிருந்தே சென்னையில் நல்ல வெயில் அடித்து வருகிறது. இன்று மட்டுமல்ல கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வாங்குகிறது. இருப்பினும் மாலையில் பெய்யலாம் என்று வானிலை மையம் கணித்திருப்பதால் பொறுத்துப் பார்ப்போம்...
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications