For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட 2ஜியை விடுங்க.. இதோ வந்து விட்டது இந்தியாவின் இமாலய தோரியம் ஊழல்.. மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி

Google Oneindia Tamil News

டெல்லி: 2ஜி ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல் எல்லாம் ஜுஜுபியாக தெரிகிறது.... தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பரபரப்பான ஊழல் விவகாரம். அதாவது ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் ஊழல்தான் இந்தப் புதிய பரபரப்பு.

இந்தியக் கடல் பகுதியிலிருந்து ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் சுரண்டப்பட்டுள்ளதாக இந்தப் பரபரப்பு ஊழல் கூறுகிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் எந்த அளவுக்கு மிக மோசமான முறையிலும், மகா மோசடியாகவும் சுரண்ட்டப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த ஊழல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அமைந்துள்ளது. மேலும் அணு சக்தி எரிபொருளான தோரியம், தவறானவர்களின் கைகளுக்குப் போகும் மகா பயங்கரமான ஆபத்தும் இதில் மறைந்திருப்பது பெரும் கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆர்டிஐ மூலம் அம்பலம்

ஆர்டிஐ மூலம் அம்பலம்

வழக்கம்போல இந்த ஊழலும் ஆர்டிஐ சேவகர்கள் மூலம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்டேட்ஸ்மேன் செய்தித்தாளும், சில ஆர்டிஐ சேவகர்களும் இணைந்து வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இதுவரை இல்லாத மகா ஊழல்

இதுவரை இல்லாத மகா ஊழல்

இதுவரை நாட்டை உலுக்கி மிகப் பெரிய ஊழல்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இந்த தோரியம் ஊழல் இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

2004 முதல் நடந்து வரும் திருட்டுத்தனம்

2004 முதல் நடந்து வரும் திருட்டுத்தனம்

கடந்த 2004ம் ஆண்டு முதல், அதாவது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் அமர்ந்தது முதல் இதுவரை இந்தியக் கடற்கரையிலிருந்து 1 லட்சத்து 95 ஆயிரத்து 300 டன் தோரியத்திற்கு இணையான 20.1 லட்சம் டன் மோனோசைட் கணிமம் சுரண்டியெடுக்கப்பட்டுள்ளதாம்.

மோனோசைட் என்றால் என்ன

மோனோசைட் என்றால் என்ன

மோனோசைட் என்பது ஒரு தாது ஆகும். இதிலிருந்துதான் தோரியம், யுரேனியம், செலினியம் போன்ற அணு சக்திப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மகா மோசடியாக திருடப்படும் மோனோசைட்

மகா மோசடியாக திருடப்படும் மோனோசைட்

இந்தியக் கடல் மணலிலிருந்து இந்த மோனோசைட்டைத்தான் மிகவும் திருட்டுத்தனமாக எடுத்து பல லட்சம் கோடி நஷ்டத்தை நாட்டுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி

மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி

இந்த ஊழலின் மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி என்கிறார்கள். மோனோசைட் ஏற்றுமதி தொடர்பான தகவல்களை கேட்டு ஆர்டிஐ சேவகர் கொடிக்குன்னுல் சுரேஷ் என்பவர் பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்திரு்நதார்.

விளக்கம் அளித்த நாராயணசாமி

விளக்கம் அளித்த நாராயணசாமி

இதற்கு பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி பதிலளித்துள்ளார். அதில், கடற்கரை தாது மணல் ஏற்றுமதிக்கு அரசு அனுமதித்துள்ளது. அதேசமயம், இதில் மோனோசைட் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அணு சக்தி சட்ட அனுமதி தேவை

அணு சக்தி சட்ட அனுமதி தேவை

மோனோசைட் மற்றும் தோரியம் ஏற்றுமதிக்கு அணு சக்தி சட்டத்தின் கீழ் அனுமதி பெற வேண்டும். அதற்கான உரிமம் பெற வேண்டும் என்றும் கூறியிரு்நதார் நாராயணசாமி. ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட உரிமம் நாட்டில் யாருக்கும் கொடுக்கப்பவடில்லை என்று கூறப்படுகிறது.

2006ம் ஆண்டு ஏற்றுமதிப் பட்டியலிலிருந்து நீக்கம்

2006ம் ஆண்டு ஏற்றுமதிப் பட்டியலிலிருந்து நீக்கம்

2006ம் ஆண்டுதோரியம், மோனோசைட் போன்றவற்றின் ஏற்றுமதியை ரத்து செய்து பிரதமர் தலைமையிலான அணு சக்தித் துறை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நடந்தது என்ன...?

ஆனால் நடந்தது என்ன...?

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்றால் மோனோசைட் போன்ற முக்கியான அணு சக்தித் தாதுக்கள் பெருமளவில் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ன. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இவை போய்க் கொண்டுள்ளன. இதைத் தடுக்க வேண்டிய, கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசின் இந்திய தாதுக் கழகம் இதைக் கண்டு கொள்ளாமல் உள்ளது.

தோரியத்தைப் பிரித்தெடுக்கும் அதிகாரம்

தோரியத்தைப் பிரித்தெடுக்கும் அதிகாரம்

நம் நாட்டில் தோரியத்தைப் பிரித்தெடுக்கும் அதிகாரம் இந்த நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால் இதற்கு மாறாக பெருமளவிலான மோனோசைட்டும், தோரியமும் திருட்டுத்தனமாக நாட்டை விட்டு போய்க்கொண்டுள்ளது.

திருடர்களுக்கு விருதும், பாராட்டும்

திருடர்களுக்கு விருதும், பாராட்டும்

என்ன கொடுமை என்றால், இப்படிப்பட்ட திருட்டுத்தனத்தில் ஈடுபட்டோருக்கு மத்திய அரசின் அல்லைட் புராடக்ட்ஸ் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பாராட்டுக்களையும், சான்றிதழ்களையும், விருதுகளையும் வாரிக் கொடுத்து கெளரவித்து வந்துள்ளது.

நிரப்பப்படாமல் இருக்கும் சுரங்க தலைமைக் கண்காணிப்பாளர் பதவி

நிரப்பப்படாமல் இருக்கும் சுரங்க தலைமைக் கண்காணிப்பாளர் பதவி

தோரியம் பிரித்தெடுக்கும் லைசென்ஸை வழங்கும் அதிகாரம் பெற்ற இந்திய சுரங்க தலைமைக் கண்காணிப்பாளர் பதவியிலிருந்து அம்புரோஸ் கடந்த 2008ம் ஆண்டே ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அப்பதவியை அப்படியே நிரப்பாமல் விட்டு வைத்துள்ளனர்.

ரகசிய உறவில் ரஞ்சன் சஹாய்

ரகசிய உறவில் ரஞ்சன் சஹாய்

உரிமம் உள்ளிட்டவற்றை வழங்கும் பொறுப்பில் மத்திய மண்டல சுரங்கக் கண்காணிப்பாளர் ரஞ்சன் சஹாய் வசம் ஒப்படைத்துள்ளனர். இவரோ, பல்வேறு சுரங்க அதிபர்கள், தனியார் சுரங்க அதிபர்களுடன் நல்ல நெருக்கம் பாராட்டி வருபவராம்.

இதுவரை சுரண்டியெடுக்கப்பட்டுள்ள மோனோசைட் தாதுவின் மதிப்பு ரூ. 60 லட்சம் கோடி இருக்கும் என்று கணக்குகள் கூறுவதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வரும் நாட்கள் மிகப் பெரிய தலைவலியாக மாறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
It's a scam that could put Coalgate and the 2G scam to shame. TIMES NOW investigation reveals how precious nuclear fuel to the tune of 60 lakh crore rupees is being squandered in Southern India. Not only does it expose the loot of our country's natural resources, it also poses a very real danger of nuclear fuel falling into the wrong hands. The scam has raised questions of how thorium was illegally plundered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X