தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு அரக்கோணத்தில் நடந்த கொள்ளை.. 4 பேர் கைது! பரபர தகவல்கள்
அரக்கோணம்: தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. புஷ்கரன் தனது தாய், பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அவரது வீட்டை மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேகமாக தட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த புஷ்கரன் கதவைத் திறக்காமல் யார் என கேட்டுள்ளார். அதற்கு அந்த கொள்ளையர்கள் பதில் அளிக்கவில்லை. எனினும் கதவை திறக்க மறுத்துள்ளனர்.

கொள்ளை
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் கதவை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டார். இதில் வீட்டிலிருந்தவர்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 25 சவரன் நகை, 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

திரைப்படம்
இதையடுத்து கொள்ளை சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீரன் திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளை குறி வைத்து வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடிப்பார்கள்.

உரிமையாளர்கள்
கொள்ளையடித்துவிட்டு உரிமையாளர்களையும் கொன்றுவிடுவார்கள். இந்த நிலையில் அரக்கோணத்தில் நடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள வியாசபுரத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.

துப்பாக்கி
இதே இளைஞர்கள் கடந்த அக்டோபர் 15 ம் தேதி அரக்கோணம் அடுத்த பாலவாய் கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் துப்பாக்கி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். அந்த துப்பாக்கியை பயன்படுத்தியே ஆடிட்டர் புஷ்கரன் வீட்டில் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications