For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை DR0 உரிமம் பெற்று ஆறு அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

4killed Sattur factory blast : Chief Minister announce Relief Fund

அப்போது ஆலை உரிமையாளர் கருப்பசாமி செந்தில் ஆகிய இருவரும் பட்டாசுக்கு தேவையான மருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்ட போது உராய்வின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.

இந்த வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மஞ்சள்ஒடைபட்டியை சேர்ந்த முனியசாமி கண்ணகுடும்பன் பட்டியைச் சேர்ந்த காசி கொம்மிங்காபுரத்தை சேர்ந்த பெருமாள் சரஸ்வதி அய்யம்மாள், விஜயகரிசல்குளத்தை சேர்ந்த செந்தில், கருப்பசாமி உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் வெம்பக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்கள். சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார், காசி உள்ளிட்ட 4 பேர் மரணமடைந்தனர். படுகாயங்களுடன் சிலர் சாத்தூர், கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழக்கப்படும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chief Minister pays tributes to the families of the victims of the blast at a firecracker factory near Sattur in Virudhunagar district. Stalin mourned. The families of the victims will get Rs. 3 lakh and Rs. 1 lakh each for the injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X