அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடியா இல்ல இடியா.. யார் இந்த வெங்கடேஷ் ஐயர்? எம்பிஏ, சிஏ படிச்சிட்டு கிரிக்கெட் ஆடும் குட்டி கங்குலி

Google Oneindia Tamil News

அபுதாபி: இத்தனை நாளா எங்கப்பா போயிருந்தீங்க.. இந்த அடி அடிக்குறீங்களே இதற்கு முன்னாடி நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. சொல்லுங்க.. சொல்லுங்க.. என பாட்ஷாவிடம் கேட்கும் தம்பி கதாப்பாத்திரம் போல கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

Recommended Video

    MI vs KKR: Venkatesh Iyer continues dream run, scores maiden IPL fifty against Mumbai

    ஏனென்றால் மொத்தமே 2 ஐபிஎல் மேட்சில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் உற்றுப் பார்க்க வைத்து விட்டார் இந்த "குட்டி கங்குலி."

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக, தனது முதல் போட்டியிலேயே, 27 பந்துகளில் 41 ரன்கள் குவித்தபோதே, யாருப்பா இவரு, என்று ரசிகர்கள் புருவம் உயர்த்தினர். ஆனால் நேற்று, மும்பைக்கு எதிராக அதுவும், உலகத்தரம் வாய்ந்த பும்ரா, பவுல்ட், மில்னே போன்றோரை எதிர் கொண்டு, 30 பந்துகளில் 53 ரன்கள் விளாசி டபுள் ட்ரீட் கொடுத்துவிட்டார் வெங்கடேஷ் ஐயர்.

    ஏன் இப்படி செய்தார்? உடனே விசாரியுங்கள்.. வெளியான போட்டோ- பிசிசிஐ ரேடாரில் மாட்டிய இளம் ஐபிஎல் வீரர்ஏன் இப்படி செய்தார்? உடனே விசாரியுங்கள்.. வெளியான போட்டோ- பிசிசிஐ ரேடாரில் மாட்டிய இளம் ஐபிஎல் வீரர்

    ரஜினி ரசிகர்

    ரஜினி ரசிகர்

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்த வெங்கடேஷ் ஐயருக்கு இப்போது வயது 26. காலதாமதமாக லைம் லைட்டில் வரக் காரணம், இவர் உழைப்பாளி மட்டுமல்ல, பெரிய படிப்பாளி. ஆம்.. ரஜினியின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் ஐயருக்கு, "என் வழி தனி வழி.." என்ற பஞ்ச் டயலாக்தான் ரொம்பவே பிடிக்குமாம். ஒரு வகையில் தனது வாழ்க்கையும் அப்படித்தான் என்று சிரித்தபடியே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் வெங்கடேஷ் ஐயர். அது வார்த்தையல்ல. உண்மையிலேயே வெங்கடேஷ் ஐயர் வாழ்க்கை அப்படித்தான் இருந்துள்ளது.

    படிக்க சொன்ன குடும்பம்

    படிக்க சொன்ன குடும்பம்

    பொதுவான நடுத்தர குடும்பங்களைப் போலவே, வெங்கடேஷ் ஐயர் குடும்பமும், "நீ படிச்சி பெரியாளா வரனும்ப்பா.." என்றுதான் சொல்லி வளர்த்துள்ளனர். பிகாம் முடித்ததும், எம்பிஏ ஃபைனான்ஸ் படித்துள்ளார் வெங்கடேஷ் ஐயர். அத்தோடு விடவில்லை. சார்ட்டர்ட் அக்கவுண்ட் வேலையில், செட்டில் ஆகும் முடிவில் சிஏ இன்டர்மீடியேட் எக்சாம்களை கிளியரும் செய்து விட்டார். ஆனால், சின்ன வயசிலிருந்து கிரிக்கெட் மீது தீராத மோகம் கொண்ட தனக்கு, படிப்பும், வேலையும், இடையூறாக இருப்பதை உணர்ந்து கொண்டார்.

    கிரிக்கெட்டே உலகம்

    கிரிக்கெட்டே உலகம்

    பெங்களூரில் கிடைத்த பணி வாய்ப்பை உதறி விட்டு கிரிக்கெட்டே தனது எதிர்காலம் என்று வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார் வெங்கடேஷ் ஐயர். அவரது தாயாரும் மகனின் இந்த முயற்சிக்கு பக்கபலமாக இருந்ததுதான் பெரிய பிளஸ். மகாராஷ்டிரா உள்ளூர் அணிக்காக 2015 முதல் ஆடத் தொடங்கிய வெங்கடேஷ் ஐயருக்கு, 2018ல், ரஞ்சி போட்டியில் ஆடும் வாய்ப்பு கைக்கு வந்து சேர்ந்தது. அப்போது முதல் ஏற்றம்தான்.

    குரு கங்குலி

    குரு கங்குலி

    வெங்கடேஷ் ஐயரின் பயமற்ற அசத்தல் ஷாட்டுகளும், சிக்சர்களும் யுவராஜ் சிங்கை நினைவுபடுத்துகின்றன. ஆனால், தனக்கு சவுரவ் கங்குலிதான் ரோல் மாடல் என்கிறார் வெங்கடேஷ் ஐயர். இடது கை பேட்டிங், வலது கையில் பவுலிங் என்ற ஸ்டைலை "தாதாவிடம்" இருந்துதான் நான் மானசீகமாக கற்றுக் கொண்டேன். எனது இளம் வயது முதல், கங்குலி பேட்டிங் ஆடும் விதம், அவர் இமாலய சிக்சர்களை பறக்க விடும் ஸ்டைல் போன்றவை மனதுக்குள் என்னையும் அறியாமல் பதிவாகிக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் ரைட் ஹேன்ட் பேட்ஸ்மேனாக இருந்த நான் பிறகு லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேனாக மாற, கங்குலியை மானசீக குருவாக ஏற்றதுதான் முக்கிய காரணம் என்று நெகிழ்கிறார் இந்த இளம் நம்பிக்கை நட்சத்திரம்.

    வெங்கடேஷ் ஐயர் ரெக்கார்ட்

    வெங்கடேஷ் ஐயர் ரெக்கார்ட்

    வெங்கடேஷ் ஐயர், மொத்தம் 24 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 47.16 என்ற அசத்தல் அவரேஜ் வைத்துள்ளார். உள்ளூர் டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 140. 40 போட்டிகளில் ஆடியும் இந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதெல்லாம் வேற லெவல். அவரே சொன்னது போல, கங்குலியை போல, வெங்கடேஷ் ஐயரும், ஒரு மீடியம் வேகப்பந்து வீச்சாளர். டி20 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது எகானமி ரேட் 7க்கும் கீழ்தான். சையது முஸ்தாக் அலி டிராபியில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தை பார்த்து கவர்ந்த கேகேஆர் நிர்வாகம், இவரை 20 லட்ச ரூபாய் அடிப்படை மதிப்பில் ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Venkatesh Iyer Bio Detail In Tamil: After completing his B.Com, Venkatesh Iyer studied MBA Finance. And not more than that he cleared the CA Intermediate exams. But from an early age, he had an insatiable passion for cricket and realized that his studies and work were a hindrance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X