பயங்கரம்! நில அபகரிப்புக்கு எதிர்ப்பு.. தாய் - மகளை உயிருடன் புதைத்த கும்பல்.. ஆந்திராவில் 'ஷாக்'
அமராவதி: ஆந்திராவில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலத்தை அரசியல் செல்வாக்கு படைத்த நபர்கள் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தாயையும், மகளையும் குழித்தோண்டி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை எதேச்சையாக பார்த்த ஒருவர், ஊர் மக்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு வந்து இருவரையும் மீட்டனர்.
இருவரையும் உயிருடன் புதைக்க முயன்றதற்கு வீடியோ ஆதாரம் உள்ள போதிலும், போலீஸார் இது தெரியாமல் நிகழ்ந்த விபத்து என மழுப்புவதுதான் பெரும் கொடுமையாக உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் குறித்து இங்கு காண்போம்.

விலைக்கு வாங்கிய நிலம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். கூலித்தொழிலாளியான இவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்து வைத்த பணத்தில் கடந்த 2010-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமாராவ் (46) என்பவரிடம் இருந்து 5 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். ராமாராவ் அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு பெருமளவில் அரசியல் செல்வாக்கும் உள்ளது.

நிலத்தை அபகரிக்க முயற்சி
இந்த சூழலில், கடந்த 2015-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் கூலித் தொழிலாளி லட்சுமி நாராயணன் உயிரிழந்தார். இதையடுத்து, லட்சுமி நாராயணனுக்கு விற்ற நிலத்தை ராமாராவும், அவரது சகோதர்களும் அபகரித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி நாராயணின் மனைவி தாளம்மா (55)நிலப்பட்டா உட்பட அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, ராமாராவ் தரப்புக்கு சாதகமாக பேசினர்.

நீதிமன்றம் சென்றதால் கோபம்
பணத்துக்கு விலை போய்விட்ட போலீஸாரை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என தெரிந்துகொண்ட தாளம்மா, நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் இரு தரப்பும் எந்தக் கட்டுமானத்தையும் செய்யக் கூடாது என உத்தரவிட்டது. சிவில் வழக்கு என்பதால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தாளம்மா மீது ராமாராவும் அவரது சகோதரர்களும் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

உயிருடன் புதைத்தனர்
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ராமாராவ், நீதிமன்ற உத்தரவையும் மீறி குறிப்பிட்ட இடத்தில் மணல், செங்கற்களை வந்து இறக்கினார். இதனை கேள்விப்பட்ட தாளம்மா, தனது மகள் சாவித்திரியுடன் அந்த இடத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமாராவ், தனது சகோதரர்கள் ஆனந்த் ராவ், பிரகாஷ் ராவ் ஆகியோருடன் நேற்று அங்கு வந்து தாளம்மாவையும், சாவித்திரையும் அங்கு இருந்து சென்றுவிடுமாறு மிரட்டினர். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தாக்கி கீழே போட்டு தங்கள் டிராக்டர்களில் இருந்த மணலையும், கற்களையும் அவர்கள் மீது ராமாராவ் உள்ளிட்டோர் கொட்டினர். இதில் அவர்கள் மணலில் முழுவதுமாக புதைந்தனர்.

மீட்பு - வழக்கு பதிவு
இந்நிலையில், இந்த சம்பவத்தை தூரத்தில் இருந்து எதேச்சையாக பார்த்த ஒருவர், இதுகுறித்து கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அங்கு வந்த மக்கள் மண்ணில் புதைந்திருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, இதுகுறித்து புகாரின் பேரில் மண்டசா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், தாளம்மா, சாவித்திரி மீது மணலை அவர்கள் வேண்டுமென்றே கொட்டவில்லை. தவறுதலாக அவர்கள் மீது விழுந்துவிட்டதாக சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications