For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் 50 ரூபாய்தான்.. ஆந்திர பாஜக தலைவரின் அறிவிப்பு

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவார்ட்டர் மதுபாட்டில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் , அரசுக்கு அதிக வருமானம் கிடைத்தால் தரமான குவார்ட்டர் பாட்டில் ஒன்றின் விலை 50 ரூபாயாக குறைக்கப்படும் என பாஜக ஆந்திர மாநில தலைவர் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

2014ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு தலைமையில் 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.

4 ரூபாய் போதாது என்றேன்.. கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தார்.. நன்றியுடன் நினைவுக்கூறும் குமரி அனந்தன்!4 ரூபாய் போதாது என்றேன்.. கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தார்.. நன்றியுடன் நினைவுக்கூறும் குமரி அனந்தன்!

இந்நிலையில் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 இடங்களில் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் முந்தைய தெலுங்கு தேசம் கட்சியின் பல கொள்கை முடிவுகளை மாற்றி வருகிறார்.

ஆட்சியை பிடிக்க போட்டி

ஆட்சியை பிடிக்க போட்டி

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவினர் ஏராளமான திட்டங்களை தீட்டி வருகின்றனர். இவர்களுக்கு இணையாக தெலுங்கு தேசம் கட்சி இழந்த ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு பல்வேறு பகீரத பிரயாத்தனங்களை செய்து வருகின்றனர்.

பாஜக தலைவர் பேச்சு

பாஜக தலைவர் பேச்சு

இந்தநிலையில் ஆந்திர பிரதேச பாஜக தலைவரான சோமுவீரராஹு பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆந்திர மாநிலத்தில் மதுபான விலையை குறைக்கும் என உறுதியளித்துள்ளார். செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரஜா அக்ரஹா சபா" அதாவது மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொண்டர்களிடையே உரையாற்றிய ராஜு பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கோடி வாக்குகளை அளியுங்கள் வெறும் 70 ரூபாய்க்கு மது பானம் வழங்குவோம் என்றார்.

50 ரூபாய்க்கு மதுபாட்டில்

50 ரூபாய்க்கு மதுபாட்டில்

மேலும் அரசுக்கு அதிக வருமானம் வந்தால் தரமான மது வெறும் 50 ரூபாய்க்கு விற்கப்படும் எனக் கூறிய வீரராஜு, ஆந்திர மாநிலத்தில் தற்போது 200 ரூபாய் வரைக்கும் மதுபானங்கள் விற்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நபர் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வரை மதுபானங்கள் செல்லப்படுவதாகவும் அந்த மது பாட்டில்களும் மற்றும் தரம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான விலை குறைக்கப்படுவதுடன் தரமான மது பாட்டில்கள் 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்கப்படும் எனக் கூறினார்

சமூக வலைதளங்களில் கிண்டல்

சமூக வலைதளங்களில் கிண்டல்

ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன அளவில் பாஜக தலைவருக்கு மதுபான விலையை குறைப்பது தான் பெரிய பிரச்சினையாக போய் விட்டதா என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில் , வீரராஜுவின் இக்கருத்துக்கு சிலர் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவில் தற்போது மதுபானங்கள் 200 ரூபாய் முதல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The BJP Andhra Pradesh leader has said that if the BJP comes to power in Andhra Pradesh, a quarter bottle of liquor will be sold for 70 rupees and if the government gets more revenue, the price of a quality quarter bottle will be reduced to 50 rupees, which is spreading fast on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X