கடைசி நேரத்தில் அதிரடி திருப்பம்.. திமுக வேட்பாளர் கண்ணன் மீதுள்ள 21 வழக்கு லிஸ்ட் வெளியானது..!

திமுக வேட்பாளர் குற்றப்பின்னணியை கொண்டவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: திமுகதான் மெஜாரிட்டியில் வெற்றி பெறும், திமுகதான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற பரபரப்பு தகவல்கள் அரசியல் களத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென ஒரு ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக பற்றிய ஒரு புகார் கிளம்பி உள்ளது.. இது அரியலூர் திமுகவையே அசைத்து பார்க்க வைத்து வருகிறது.

ஜெயங்கொண்டம் தொகுதியை இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.. திமுக சார்பில் கேஎஸ்கே கண்ணன் என்பெவர் போட்டியிடுகிறார்..

மறுபக்கம், பாமக சார்பில் வக்கீல் பாலு போட்டியிடுகிறார்.. இதனால் திமுக - பாமக நேரடியாக மோதும் களமாக ஜெயங்கொண்டம் மாறி உள்ளதால், பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வக்கீல் பாலு

வக்கீல் பாலு

பாமக வேட்பாளர் பாலுவை பொறுத்தமட்டில், மிகச்சிறந்த வக்கீல் ஆவார்.. 8 வழி சாலை போராட்டம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் பலவற்றில் முன்னின்று போராடியவர்.. சட்ட போராட்டம் நடத்தியவர்.. இதனால் தொகுதியில் இவர் படுபிரபலம்.. மக்கள் செல்வாக்கை நேரடியாக பெற்றவர்.. ஆனால், திமுக வேட்பாளர் கண்ணன், இந்த அளவுக்கு இல்லை என்று தெரிகிறது.. அதுமட்டுமில்லை.. கிரிமினல் வழக்குகள் பின்னணியும் கண்ணன் மீது உள்ளது தற்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது...

வேட்பு மனு

வேட்பு மனு

அதாவது, தேர்தலுக்கு முன்பு, சட்டமன்ற வேட்பு மனு தாக்கலின்போது, ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் சொத்து மதிப்பு மற்றும் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்து வேட்புமனுவில் குறிப்பிடுவார்கள் இல்லையா? அந்த வகையில்,இந்த திமுக வேட்பாளர் மீது 21 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.. அவை இந்திய தண்டனை சட்டத்தின் முக்கிய பிரிவுகளின் கீழும் இருக்கிறதாம்.. இந்த விவரங்கள் அனைத்தும் அந்த வேட்பமனு விவகாரத்திலேயே தெரியப்படுத்தப்பட்டுள்ளது.. இதை பார்த்துததான் தொகுதி மக்கள் அதிர்ந்து கிடக்கிறார்கள்.

பிரமாண பத்திரம்

பிரமாண பத்திரம்

கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்போதுவரை மொத்தம் 21 கேஸ்கள் கண்ணன் மீது இருக்கிறதம்.. அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்களை நாசம் செய்தல், கொரோனா பரவிய காலம் அன்றே போராட்டங்களில் ஈடுபட்டு மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக்குறியாக்கியது முதல் ஏகப்பட்ட கேஸ்கள் நிலுவையில் உள்ளன.. இதையெல்லாம் அவரே தேர்தல் பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

21 கேஸ்கள்

21 கேஸ்கள்

இந்த விவரங்கள் இப்போது பொது வெளியில் விவாத பொருளாக மாறியுள்ளது..இன்னும் தேர்தலில் வெற்றியே பெறவில்லை.. ஒரு வேட்பாளர் இப்போதே 21 குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றால், ஒருவேளை நாளைக்கு ஜெயித்து வந்துவிட்டால்? என்ன ஆவது என்று தொகுதி மக்கள் கலங்கி போய் உள்ளனர்.. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், பாமக வேட்பாளர் வக்கீல் + பல மக்கள் போராட்டங்களை கையில் எடுத்தவர்.. திமுக வேட்பாளரோ 21 கேஸ்கள் உள்ள நபர்..!

பாமக

பாமக

இதைதான் பாமகவும் அதன் கூட்டணி கட்சியினரும் தங்களுக்கு சாதகமாக தொகுதியில் சொல்லி வாக்குகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. அடுத்த ஆட்சி திமுகதான் என்று பெருமிதம் நிலவும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் 4 நாள்தான் இருக்கும் நிலையில், இப்படி ஒரு மேட்டர் வெளிவந்து திமுகவில் பெரிய சூறாவளியை ஜெயங்கொண்டத்தில் இருந்து கிளப்பி கொண்டிருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+