அரியலூரில் கொரோனா பாதிப்பு மிக மிக மோசம்.. வெறும் 10 நாட்களில் 218% அதிகரித்த ஆக்டிவ் கேஸ்கள்
அரியலூர்: தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் கடந்த 10 நாட்களில் 218% அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த சில தினங்களாக 33 ஆயிரத்திலேயே இருந்த தினசரி கொரோனா பாதிப்பு. நேற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் அதில் 12 வயதுக்குட்பட்ட 1307 பேர் உட்பட மொத்தம் 34875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து டிராக்டர் விஜயானந்த் புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 218% அதிகரித்துள்ளது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 1624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 259 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல அரியலூரில் நேற்று 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் 1511 பேர் உட்பட 1624 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் வரை தலைநகர் சென்னையில் தான் கொரோனா பரவல் உச்சத்திலிருந்தது. ஆனால், கடந்த சில தினங்களாகச் சென்னையில் வைரஸ் பாதிப்பு குறைந்து வரும், அதே நிலையில், மாநிலத்தில் பிற மாவட்டங்களில் வைரஸ் பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications