அரைகுறை ஆடையில் காண்டம்களுடன் 3 பெண்கள் விபச்சாரம்.. ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பெண் புரோக்கர் கைது

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Woman arrested for inducing innocent girls in Prostitution at Ariyalur

இந்த தகவலின் பேரில் போலீஸார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம், சிதம்பரம், இலையூர் பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து 43 வயது பெண்ணை போலீஸார் கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும் இனி இப்படி செய்யக் கூடாது என எச்சரித்து அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தனர். அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய 43 வயது பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அந்த பெண்ணிடம் இருந்து ரூ 3100 பணமும் மதுபாட்டில்கள், காண்டம்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த பெண் மீது ஏற்கெனவே 3 விபச்சார வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போலீஸாரும் விபச்சார தொழில் செய்வோரை கைது செய்து வருகிறார்கள். ஆனாலும் இந்த குற்றங்கள் இன்னும் குறைந்த பாடில்லை. இதில் என்ன கொடுமை என்றால் இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான பெண்களை அவர்களுடைய குடும்பத்தினரே இந்த தொழிலில் தள்ளிய கொடூரம் உள்ளது.

அது போல் சில அப்பாவி பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டும் இது போன்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சில இடங்களில் ஸ்பா என்ற பெயரிலும் மசாஜ் சென்டர் என்ற பெயரிலும் விபச்சாரம் நடந்து வருகிறது. வாட்ஸ் ஆப்பில் கூட ஒரு குரூப் தொடங்கப்பட்டு பலர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

மனைவியை மாற்றுவது எனப்படும் Wife swapping நடந்து வருகிறது. ஒரு பெரிய ஹோட்டலுக்கு பணக்காரர்கள் செல்வார்கள். அங்கு அவர்களுடைய கார் சாவிகளை ஒருவர் வாங்கி குலுக்கி போடுவார். யார் எந்த சாவியை எடுக்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவியை அந்த நபருடன் மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படியான கலாச்சார சீர்கேடுகளும் நடக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+